மாற்று முகவர் நிகழ்ச்சித்திட்டம்

வறுமையை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று முகவர் திட்டமானது பங்கேற்றல் அபிவிருத்தித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு திட்டமாகும். கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலேயே அது ஆரம்பிக்கப்பட்டது. இது விசேடமாக வறிய மக்களை அறிவுறுத்தும் செயற்பாட்டின் மூலமாக அவர்களை வலுப்படுத்தும் நோக்கிலான சமூக உயிரோட்ட உபாய மார்க்கமாக இது கருதப்படுகின்றது. 4 துறைகள் ஊடாக அபிவிருத்தி கொள்கை வகுப்பாளர்கள், அபிவிருத்தி நிபுணர்களால் அரச மற்றும் அரச சார்பற்ற அபிவிருத்தி திட்டங்களுக்காக இதன் கொள்கைகள் மற்றும் முறைமைகள் பயன்படுத்தப்பட்டன. இது தொடர்பாக விபரமானதொரு பகுப்பாய்வினை இக்கட்டுரையை வாசிப்பதன் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.

ஜனசவிய நிகழ்ச்சித் திட்டம்

This section is under construction

ஆண் பெண் சமத்துவம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்

கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது  இலங்கையில் கிராமிய அபிவிருத்திக்கென்று தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒரு தேசிய நிறுவனமாகும். அதன் மூலம் கிராமிய அபிவிருத்தி துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக பயிற்சித் திட்டங்கள் பலவற்றை உருவாக்கி செயற்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் சமூகத்தில் குறைந்த நன்மைகளைக் கொண்ட பெண்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒரு திட்டமொன்றை செயற்படுத்தும் தேவை எழுந்தது. அது தொடார்பாக இன்னும் அதிகமாக நோக்கும் போது அபிவிருத்தியுடன் பொருத்தக்கூடிய முக்கிய ஒரு அம்சமான ஆண் பெண் சமத்துவம் என்ற எண்ணக்கருவை நிறுவனத்தினால் திட்டமிடப்பட்ட பயிற்சிகளில் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டும் என்ற விடயம் அறியப்பட்டது. அதனடிப்படையில் கனேடிய அபிவிருத்தி நிறுவனத்தின் வழிகாட்டல் மற்றும் உதவியுடன் அவ்வெண்ணக்கரு உள்ளடக்கப்பட்ட பயிற்சிகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது, செயற்படுத்தப்படுகின்ற கிராமிய அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு பயிற்சி நெறிகளுக்கு ஆண் பெண் சமத்துவம் என்ற எண்ணக்கருவை உள்ளடக்குவதற்கு பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இது இரண்டு கட்டங்களாக செயற்படுத்தப்பட்டன. இதன் நோக்கங்களாவன:

  • கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிரறுவனத்தின் அனைத்து பயிற்சி மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்கு ஆண் பெண் சமத்துவம் என்ற விடயம் தொடர்பாக முழுமையான விளக்கத்தை அளிப்பதன் மூலம் இது தொடர்பான அடிப்படை அறிவைக் கொண்ட  பயிற்சி உத்தியோகத்தர்களை உருவாக்குதல்.
  • கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிற்சி நிகழ்ச்சிகளுக்கு ஆண் பெண் சமத்துவம் தொடர்பான விடயத்தை உள்ளடக்குதல்.
  • வறுமையை ஒழிப்பதற்காக செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது பெண்களைப் போன்றே ஆண்களினதும் சம பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்காக ஆண் பெண் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்ளுதல்.

இத்திட்டத்தின் இறுதி நோக்கமாக நிறுவனத்தின் பயிற்சி உத்தியோகத்தர்கள் மூலமாக 3000 இலக்கு குழுக்களுக்கு இரண்டு வருட காலப் பகுதியுள் ஆண் பெண் சமத்துவம் என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சிறு தேயிலைத் தோட்ட நிகழ்ச்சித் திட்டம்

This section is under construction

சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம்

This section is under construction

மாகாண கிராமிய நிகழ்ச்சித் திட்டம்

கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. 2007 ஆம் ஆண்டில் மாகாண கிராமிய அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக செய்யப்பட்ட செயலமர்வின் பின்னர் எழுந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பமாகியது. கிராமிய மக்களது வறுமையை ஒழித்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு முறையாக பங்கேற்றல் அபிவிருத்தியை பொருத்தப்பாடுடையதாக்குவதற்கு தேவையான அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை அவர்களிடையே ஏற்படுத்தும் கட்டம் கட்டமான பயிற்சியாக இது ஆரம்பிக்கப்பட்டது. 07 மாகாணங்களில் நிகழ்ச்சித்திட்ட ஆரம்பத்தின் போது அடிப்படை நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் பின்னர் தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் மட்டும் இத்திட்டமானது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.

இத்திட்டமானது மேல் மாகாணத்தில் ‘கிராம சக்தி’ என பெயரிடப்பட்டது. மேல் மாகாண கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிலிமதாலாவை மற்றும் பொரளை கிராமிய அபிவிருத்தி பயிற்சி நிருவனத்தினால் பயிற்சிகள் சில வழங்கப்பட்டன. அதனடிப்படையில் தமது சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரதேச செயலகங்களில் இவ்வேலைத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், கடான, அத்தனகல்ல, மகரகம, கிருலபனா, பாதுக்க, சீதாவாக, ரத்மலான, மொரடுவை,பேருவல, தொடங்கொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் கிராமிய நடுநிலையாளர்களைக் கட்டியெழுப்பி இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. சிறு குழுக்களை ஆரம்பித்தல், கூட்டுச் செயற்பாடுகளை ஆரம்பித்தல், குழுக்களுக்கான பொதுவான நிதியை கட்டி எழுப்புதல், சலுகைக் கடன் வசதிகளை உருவாக்குதல், வாடிக்கையாளர் திட்டங்களை உருவாக்குதல், சுய தொழில் பயிற்சி மற்றும் சுய தொழில்களை உருவாக்குதல், ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்குதல், வீட்டுத் தோட்டம் போன்றவை இதன் மூலம் நிறைவேற்றத் திட்டமிட்ட ஒருசில நிகழ்ச்சிகளாகும்.

விதாதா நிகழ்ச்சித் திட்டம்

தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் காணப்படுகின்ற விஞ்ஞான வள நிலையத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘கிராமத்திற்கு தொழிநுட்பம்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான முயற்சியாளர்களுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் சேவை வசதிகளை சக்தி மிக்கதாக, சமூகத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்துவதற்காக, கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து விரிவான வேலைத்திட்டமொன்றை தாயரித்தன.

அதனடிப்படையில் தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர்களிடையேயும் வெளிக்கள உத்தியோகத்தர்களிடையேயும், பங்கேற்றல் அபிவிருத்தி முறைமை தொடர்பான அறிவு, திறன், மனப்பாங்கை அபிவிருத்தி செய்வதன் மூலம் சமூகத்தில் அபிவிருத்தி திட்டத்திற்கு அவர்களை ஈடுபடுத்துதல், இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

இத்திட்டமானது முன்னோடி நிகழ்ச்சித்திட்டமாக இரத்தினபுரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் பங்கேற்றலுடன் களத்தில் காணப்படுகின்ற நிலைமைகளை அறிந்து கொள்ளுதல், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டமாக இதனை தொடர்புபடுத்த வேண்டிய விதம், அதன்போது எழக்கூடிய பிரச்சினைகளை அறிந்து கொள்ளுதல், விதாதா நிலையங்களது சேவைகள் கிராமிய மாக்களை சென்றடைவதற்குப் பொருத்தமான வழிமுறையொன்றை அறிந்து கொள்ளுதல் போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்ட நோக்கங்களாகும். அதனடிப்படையில் முதலாவது முன்னோடி நிகழ்ச்சித் திட்டமாக இரத்தினபுரி மாவட்டத்தில், இத்திட்டமானது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.

இதன் போது, செயற்படுத்தப்படுகின்ற கிராமிய அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு பயிற்சி நெறிகளுக்கு ஆண் பெண் சமத்துவம் என்ற எண்ணக்கருவை உள்ளடக்குவதற்கு பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இது இரண்டு கட்டங்களாக செயற்படுத்தப்பட்டன. இதன் நோக்கங்களாவன: