கிராமிய அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான அறிவினைப் பகிர்வதன் மூலம் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் நோக்குடன் கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீட்டு பிரிவு செயற்படுகின்றது. வெளியீட்டுப் பிரிவின் மூலம் வருடாந்தம் கல்விச் சஞ்சிகைகள், பிரஜாசக்தி சஞ்சிகை, மற்றும் ‘தரனய’ போன்ற புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன. மக்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இப்புத்தகங்களை பயன்படுத்தலாம். நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட சஞ்சிகைகளை வெளியீட்டுப் பிரிவில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறே கிராமிய அபிவிருத்தித் துறையில் ஈடுபட்டுள்ள விற்பன்னர்கள், அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்ற,

 • புதிய அபிவிருத்தி அணுகுமுறை (New Development Approach)
 • ‘பரிதியே மினிசெக்’ (A man of periphery)  
 • கிராமிய அபிவிருத்தி தொடர்பான நூல் (An Academic Compilation on Rural Development)
 • Bibliography on social Mobilization,

போன்ற நூல்களை பொரளை மற்றும் பிலிமதாலவை நிலையங்களிலுள்ள நூலகங்களில் கொள்வனவு செய்யக் கூடிய வசதிகள் வெளியீட்டுப் பிரிவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வார அலுவலக நாட்களில் மு.ப. 9.00 தொடக்கம் பி.ப.3.30 இந்நிலையங்களில் நூலகங்கள் திறந்திருக்கும்.

நிறுவனத்தினால் வெளியிடப்பட குறும்படங்கள் (இவை பயிற்சி உபகரணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன)

 • மேகய் ஹரி பார (Hear is the right path)
 • சரு சித் யாய (Mind rich in ideas)

நிறுவனத்தின் வெளியீடுகள்

நூல் / சஞ்சிகை உள்ளடக்கம் பயன்படுத்துதல்/ பெற்றுக் கொள்ளுதல்
publications of the institution1
கிராம அலுவலர் கைந்நூல் (சிங்களம்) - 1994
வெளியீடு (கி.அபி.ப.ஆ.நிறுவனம்)
 • புதிய அபிவிருத்தி அணுகுமுறை
 • கிராம அலுவலர்களது கடமைப் பொறுப்புகளை புதிய அபிவிருத்தி அனுகுமுறையூடாக அறிந்து கொள்ளுதல்
 • சமூகத்தினருடன் மிக அருகிலிருந்து செயலாற்றுவது எப்படி?
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution2
கிராம அலுவலர் கைந்நூல் (சிங்களம்)
2000
நெறிப்படுத்தல்: கங்கானி சிறிமான்ன
 • அரச சேவைகளை வினைத்திறனாக கிராமிய மக்களுக்கு வழங்குவதற்கு பின்பற்றக் கூடிய முறைகள்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution3
கிராம அபிவிருத்தியும் அபிவிருத்தியும் (சிங்களம்) - 1998
ரூ.100/-
நெறிப்படுத்தல்: லயனல் விஜேராம
 • இலங்கையில் கிராமிய அபிவிருத்தியின் வரலாறும் பரிணாமமும்
 • கிராமிய அபிவிருத்தியும் சமூக சக்திகளும்
 • சுதந்திர இலங்கையில் பங்கேற்றல் வழிகள்
 • இலங்கையில் வறுமை ஒழிப்பில் இணைகின்ற வங்கிச் சங்க இயக்கம்
 • அபிவிருத்தியில் மனித ஆற்றல், திறன்களின் விருத்தி
 • கிராமிய அபிவிருத்தியில் கருத்திட்ட எண்ணக்கரு, ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி எண்ணக்கரு, இலங்கையில் வறுமையும் அதன் இயல்புகளும்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution4
புதிய அபிவிருத்தி அணுகுமுறை (சிங்களம்) - 2007
ரூ 100/-
நெறிப்படுத்தல்: ஏ.பீ.டைநீஸ் லயனல் விஜேராம
 • மாற்று முகவர் திட்டத்தின் ஆரம்பமும் வரலாறும்
 • பயிற்சி முறைமைகள்
 • தலையிடும் முறைமைகள் தலையிடுபவரின் கடமைப் பொறுப்புகள்
 • மாற்று முகவர் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள்
 • மாற்று முகவர் திட்டங்கள் ஊடாக ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றங்கள்
விலைக்கு பெற்றுக்கொள்ளலாம். நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution5
மாற்று முகவர் பயிற்சி முறைமைகள் (சிங்களம்) - 1999
ரூ 200/-
நெறிப்படுத்தல்: விமல் திசாநாயக
 • மாற்று முகவர் பயிற்சி
 • பாட உள்ளடக்கம்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution6
மனை முகாமைத்துவம் மற்றும் குடும்ப அபிவிருத்தி (சிங்களம்) - 2002
ரூ. 375/-
நெறிப்படுத்தல்: விமல் திசாநாயக்க
 • காலி மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடு ரீதியான ஆய்வுகள்.
 • குடும்ப பகுப்பாய்வு, குடும்ப அபிவிருத்தி செயற்பாடுகள்
 • அக்கிராமங்களில் ஏற்பட்ட முன்னேற்றம்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution7
பரிதியில் ஒரு மனிதன் (சிங்களம்) - 2011
ரூ 600/-
சுஜீவ ஹெட்டி தந்த்ரி
 • பங்கேற்றல் அபிவிருத்தி முறைமைகள் தொடர்பான விபரமான விடயங்கள்
 • பங்கேற்றல் அபிவிருத்தி தொடர்பான பகுப்பாய்வு
விலைக்கு பெற்றுக்கொள்ளலாம். நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution8
கிராமிய அபிவிருத்தி தொடர்பான கல்விச் சஞ்சிகை (சிங்களம்) - 2006
நெறிப்படுத்தல்: பிரியசாந்த காரியவசம்
 • மாகாண அரச சேவையை தபிக்கும் போது மத்திய அரசினால் மறக்கப்பட்ட கிராம சபை முறைகள்
 • கிராமிய அபிவிருத்தி கருத்தாய்வு மற்றும் கருத்துருமிக்க முறைமைக்கான அணுகுமுறை
 • கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக நலனோம்பல் பிரவேசம்
 • அபிவிருத்தியும் தகவல் தொடர்பாடலும்,
 • கிராமிய பொருளாதார அபிவிருத்தியின் முக்கியத்துவமும் தேவைப்பாடும்.
 • இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியும் கிராமிய கைத்தொழில்மயமும்
 • செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு முறைகள் ஊடாக வறிய மக்களை அபிவிருத்தி செயற்பாடுகளை நோக்கிக் கொண்டு செல்லுதல்
 • கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளில் மாற்று சக்திகளது கடமைப் பொறுப்புகள்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution9
கிராம அபிவிருத்தி தொடர்பான கல்விச் சஞ்சிகை (சிங்களம்) - 2009
நெறியாள்கை: பிரியசாந்த காரியவசம்
 • இலங்கையில் கிராமிய சமூகத்தினரின் விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வு அலகாக மதிப்பிடுதல்.
 • சிங்கள சமூகத்தினரிடையே காணப்படுகின்ற ஆண் பெண் சமூக ரீதியான இயல்புகள்.
 • போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்களது வருகையின் காரணமாக கரையோர கிராமிய மக்களது வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்.
 • இலங்கையில் கிராமம் மற்றும் பங்கேற்றல் அபிவிருத்தியின் பயன்பாடு.

விலைக்கு பெற்றுக்கொள்ளலாம்.
நூலகத்தில் பார்வையிடலாம்

publications of the institution10
சமூக உயிரோட்டத்தினை உயிர்ப்பிக்கும் பயிற்சி நடுநிலையாளர் - 2012
ஆசிரியர்: கீ.திசாநாயக
 • பயிற்சி நடுநிலையாளரது தேவைப்பாடு
 • பயிற்சி நடுநிலையாளரது இயல்புகளும் குணாதிசயங்களும்
 • பயிற்சி நடுநிலையாளரது கடமைப் பொறுப்புகள்
 • பயிற்சி நடுநிலையாளர் சமூகத்தினரை ஈடுபடுத்தும் விதம்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution11
பங்கேற்றல் அபிவிருத்தி அணுகுமுறையின் சமூக உயிரோட்டத்தை வலுப்படுத்தும் எண்ணக்கரு ரீதியான அடிப்படைகள் மற்றும் உபாய வழிமுறைகள் - 2010
ஆசிரியர்: ஜீ.திசாநாயக.
 • கிராம அபிவிருத்தி விடயத்தை கற்பவர்களுக்கும் நடைமுறை ரீதியாக தமது நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவோருக்கும் மாற்று முகவர் முறையை பொருத்திக் கொள்ள வேண்டிய விதம் மற்றும் அதன் சாதகமான அம்சங்கள்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution12
அபிவிருத்தி அனுபவங்கள் - 2009
நெறியாள்கை: பிரியசாந்த காரியவசம்
 • மாற்று முகவர் நிகழ்ச்சித் திட்டத்தின் பங்கேற்றல் அபிவிருத்தி முறையின் கீழ் கட்டி எழுப்பப்பட்ட பிரஜாசக்தி அமைப்புகளின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தமது பொருளாதார நிலைமைகளைக் கட்டி எழுப்பிய விதம்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution13
சிறு குழுக்கள் முறைமை
2009
ஆசிரியர்: ஜீ.திசாநாயக
 • சிறு குழுக்கள் முறை
 • ஏன் சிறு குழுக்கள் தேவைப்படுகின்றன
 • சிறு குழுக்கள் எவ்வாறு கட்டி எழுப்பப்படுகின்றன
 • வினைத்திறனான ஒரு குழுவினால் அடைந்து கொள்ளக் கூடிய பயன்கள்
 • வெற்றிகரமான சிறு குழு ஒன்றில் இருக்க வேண்டிய செயற்பாடுகள்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution14
மாற்று முகவர் நிகழ்ச்சித் திட்டம் மூலம் வெற்றி இலக்கை அடைந்தவர்கள் - 2002
நெறியாள்கை: ஜீ. திசாநாயக்க
 • மாற்று முகவர் நிகழ்ச்சித் திட்டத்தின் பங்கேற்றல் அபிவிருத்தி முறையின் கீழ் கட்டி எழுப்பப்பட்ட பிரஜாசக்தி அமைப்புகளது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தமது பொருளாதார நிலைமைகளைக் கட்டி எழுப்பிய விதம்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution15
Success Stories of change Agent Programme - 1999
RDTRI
 • மாற்று முகவர் நிகழ்ச்சித் திட்டத்தின் பங்கேற்றல் அபிவிருத்தி முறையின் கீழ் கட்டி எழுப்பப்பட்ட பிரஜாசக்தி அமைப்புகளது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தமது பொருளாதார நிலைமைகளைக் கட்டி எழுப்பிய விதம்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution16
Sri lanka journal of rural development - 2002
Rs.200/-
RDTRI
 • கிராமிய அபிவிருத்தி தொடர்பான கல்விசார் கட்டுரைகள்
விலைக்கு பெற்றுக்கொள்ளலாம். நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution17
கிராமிய அபிவிருத்திக்கான புதிய பார்வை - 2008
நெறியாள்கை: எஸ்.எஸ். விதான / அனுஷா ஏபா செனவிரத்ன / அஷான் பெர்னாண்டோ
 • தென் மாகாண சமூக அடிப்படை கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் வெற்றிகரமாகக் கட்டி எழுப்பப்பட்ட கிராமங்களது அனுபவங்கள்
பிரதிகள் முடிந்துவிட்டன. நூலகத்தில் பார்வையிடலாம்.
publications of the institution18
கல்வி கைநூல் - 2017
நெறியாள்கை: சித்திரா ஜயசிங்க
 • இலங்கையில் புராதன கிராமம் ஒன்றின் இயல்புகள்
 • இலங்கையில் வறுமை, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள்
 • மாற்று முகவர் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பமும் பரிணாமமும் தற்போதைய நிலைமைகளும்
 • கிராமிய அபிவிருத்திக்கான மாற்று முறைமைகள்
 • தற்கால சமூகப் பிரச்சினைகளுக்கு சிறு குழுக்கள் முறை அத்தியாவசியமானதொரு கருவியாகும்
 • இலங்கையில் நெற்செய்கையின் சவால்களும் சாதகமான சந்தர்ப்பங்களும்
 • வறுமையை ஒழிப்பதற்கு நிதிசார் அறிவின் முக்கியத்துவம்
 • வறுமையை ஒழிப்பதற்காக வாழ்வாதார அபிவிருத்திக்கு நுண் நிதி நிறுவனங்களது பங்களிப்பை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம்
இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். நூலகத்தில் பார்வையிடலாம்.

2020 ஆம் ஆண்டின் வெளியீட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்

வெளியீட்டு நிகழ்ச்சித் திட்டங்கள் நோக்கம் இலக்கு குழு தொகை
publication programme for 2017 01பிரஜாசக்தி சஞ்சிகை மாற்று முகவர் திட்டம் மூலம் செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களது வெற்றிகரமான அனுபவங்கள் மற்றும் அபிவிருத்திக்கு இணைத்துக் கொள்ளக்கூடிய வேறு வெற்றிகரமான அனுபவங்களை வெளியிட்டு விநியோகிப்பதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பங்களிப்புச் செய்தல்.
 • அபிவிருத்தி துறையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
 • அபிவிருத்தி நிபுணர்கள்
 • பல்கலைக்கழக பேராசிரியர்கள்
 • பல்கலைக்கழக மாணவர்கள்
1000 வெளியீடுகள்
publication programme for 2017 02தரனாய பத்திரிகை சமூக வலுப்படுத்தல் மற்றும் நலனோம்பல் அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களதும் கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தினதும் செய்திகளை வெளியிடுதல்.
 • அபிவிருத்தி துறையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
 • அபிவிருத்தி நிபுணர்கள்
 • பல்கலைக்கழக பேராசிரியர்கள்
 • பல்கலைக்கழக மாணவர்கள்
2500 வெளியீடுகள்
publication programme for 2017 04நூலகத்திற்கு தேவையான வெளியீடுகளை கொள்வனவு செய்தல் கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தொடர்ச்சியாக பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை நாடாத்தும் நிறுவனமாகையால் உத்தியோகத்தர்களது அறிவினை இற்றைவரைப்படுத்த வேண்டியதுடன் அதற்காக விசேடமாக ஒரு நூலகத்தை பேணிச் செல்லுதல்.
 • நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்
 • அபிவிருத்தி துறையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
 • அபிவிருத்தி நிபுணர்கள்
 • பல்கலைக்கழக பேராசிரியர்கள்
 • பல்கலைக்கழக மாணவர்கள்
300 வெளியீடுகள்